சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் ஒருங்கிணைந்த லெவனை தேர்வு செய்த ராயுடு!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஐபிஎல் தொடரில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சேர்த்து ஆல் டைம் லெவன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதிலும் இத்தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஐபிஎல் தொடரில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சேர்த்து ஆல் டைம் லெவன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில், அம்பதி ராயுடு ஐபிஎல்லில் மும்பை அல்லது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
Trending
அதன்படி அம்பத்தி ராயுடு தேர்வு செய்துள்ள இந்த அணியில் 9 இந்திய வீரர்களும் 3 வெளிநாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார். இதில் அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வுசெய்துள்ள அவர், மூன்றாம் இடத்தில் சுரேஷ் ரெய்னாவையும், நான்காம் இடத்தில் சூர்யகுமார் யாதவையும், ஐந்தாம் இடத்தில் கீரென் பொல்லார்டையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
அவர்களைத் தொடர்ந்து 6ஆம் இடத்டில் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்த அவர், ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் டுவைன் பிராவோவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சாளர்களாக லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரை அவர் லெவனில் வைத்துள்ளார். இறுதியில் இம்பேக்ட் வீரராக அவர் தனது பெயரை அணியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
?
With @RayuduAmbati's MI x CSK playing XI, it looks like no one stands a chance against them
What are your thoughts on Rayudu's Playing XI? #IPLonJioStar SEASON OPENER #KKRvRCB | SAT, 22nd March, 6:30 PM | LIVE on JioHotstar… pic.twitter.com/C0kJQu7bVj— Star Sports (@StarSportsIndia) March 17, 2025Also Read: Funding To Save Test Cricket
அம்பதி ராயுடு தேர்ந்தெடுத்த CSK - MI ஒருங்கிணைந்த லெவன்: சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், கீரோன் பொல்லார்ட், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்பஜன் சிங். இம்பேக்ட் வீரர் - அம்பதி ராயுடு.
Win Big, Make Your Cricket Tales Now