
Anderson Phillip Catch to dismiss Travis Head: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆண்டர்சன் பிலிப் அசாத்தியமான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களையும், கேமரூன் க்ரீன் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிராண்டன் கிங் 8 ரன்களுடனும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.