அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சதர்லேண்ட் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை அனபெல் சதர்லேண்ட் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்ம், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் தர்பபில் ஜெஸ் ஜோனசன், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளமிட்டனர்.
Also Read
இதில் ஷஃபாலி வர்மா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுமுனையில் அபாரமாக விளையாடிய மெக் லெனிங் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை அனபெல் சதர்லேண்ட் பந்துவீச்சில் அசத்தியதுடன் ஃபீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு அசத்தியுள்ளார். அதன்படி மின்னு மணி வீசிய இன்னிங்ஸின் 17ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட அமெலியா கெர் பெரிய சிக்சரை விளாசும் முயற்சியில் பந்தை தூக்கி அடித்தார். ஆனால் அந்த ஷாட்டை அவரால் எதிர்பார்த்த அளவில் அடிக்க முடியாமல் போனது.
A #TATAWPL Classic
Annabel Sutherland plucks one out of thin air
Is this the best catch of the season yet?
Updates https://t.co/wVyWwYwJ0S #TATAWPL | #DCvMI | @DelhiCapitals pic.twitter.com/T8rzoMcRMf— Women's Premier League (WPL) (@wplt20) February 28, 2025Also Read: Funding To Save Test Cricket
இதனால் பந்து உயரச்சென்றதை அடுத்து மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அனபெல் சதர்லேண்ட் ஓடிவந்த அபாரமான டைவை அடித்ததுடன் கேட்ச் பிடித்தும் அசத்தினார். இதனால் இப்போட்டியில் 17 ரன்களைச் மட்டுமே சேர்த்திருந்த அமெலியா கெர் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் அனபெல் சதர்லேண்ட் பிடித்த இந்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now