எதிர்முனை பேட்டரை ரன் அவுட்டாக்க முயற்சித்த ஸம்பா; வைரல் காணொளி!
பிபிஎல் போட்டியில் மறுமுனையில் கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை ஆடம் ஸாம்பா ரன் அவுட் செய்ய முயன்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், தீப்தி சர்மா ஆகியோர் அதுபோல ரன் அவுட் செய்து பலத்த சர்ச்சைகளுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பிபிஎல் தொடரிலும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸின் கடைசி ஓவரைப் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா வீசினார்.
Trending
அப்போது 5ஆவது பந்தை வீச வந்தபோது மறுமுனையில் இருந்த பேட்டர் ரோஜர்ஸ், பந்தை வீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறியதைக் கண்டு உடனே ரன் அவுட் செய்தார் ஸாம்பா. ஆனால் அவர் செய்த தவறு, பந்து வீசும் முறையை முழுதாக முடித்துவிட்ட பிறகே ரன் அவுட் செய்தார். ஆனால் விதிமுறைகளின்படி பந்துவீசும் முறையை முடிக்கும் முன்பே ரன் அவுட் செய்து விட வேண்டும்.
அப்போது மறுமுனையில் உள்ள பேட்டர், கிரீஸை விட்டு வெளியேறியிருந்தால் ரன் அவுட் ஆவார். ஆனால் தவறான முறையில் ஸாம்பா ரன் அவுட் செய்ததால் 3ஆவது நடுவர் இதை ஏற்காமல் பேட்டருக்குச் சாதகமான தீர்ப்பை அளித்தார். வழக்கமாக இந்திய வீரர்கள் செய்யும் ஒரு செயலைத் தற்போது ஆஸ்திரேலிய வீரரும் செய்திருப்பது சர்ச்சையையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Spicy, spicy scenes at the MCG.
— KFC Big Bash League (@BBL) January 3, 2023
Not out is the call...debate away, friends! #BBL12 pic.twitter.com/N6FAjNwDO7
மேலும் வரவுள்ள ஐபிஎல் 2023 தொடரில் இந்த ரன் அவுட்டிற்கு பெயர் போன அஸ்வினுடன் இணைந்து ஆடம் ஸாம்பாவும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now