
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 79 ரன்களையும், இறுதியில் அதிரடியாக விளையடைய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களையும், அக்ஸர் படேல் 42 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரச்சின் ரவீந்திரா 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்களில் வில் யங்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செலும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார்.