BAN vs PAK: பந்துவீச்சிலும் தடம்பதிக்கும் பாபர் ஆசாம் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் பந்துவீச்சில் ஈடுபட்டு அனைவரையும் வியக்கவைத்தார்.
27 வயதான பாகிஸ்தான் அணியின் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக 36 டெஸ்ட் போட்டிகள், 83 ஒருநாள் போட்டிகள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 200 போட்டிகளை நெருங்கியிருக்கும் பாபர் அசாம் தனது சிறப்பான பேட்டிங் மூலமாக விராட் கோலி, ஜோ ரூட், வில்லியம்சன் ஆகியோரது பட்டியலில் தனது பெயரையும் பதித்துள்ளார்.
Trending
ஆனால் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை பந்துவீசியது கிடையாது. இந்நிலையில் தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக பாபர் அசாம் பந்துவீசினார்.
இதுவே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக பந்து வீசுவது என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் அணி 75 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த போது வலதுகையை ஆஃப் ஸ்பின்னரான அவர் நேற்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சற்று சிறப்பாக பந்து வீசினார் என்று கூறலாம்.
Babar Azam proved to be the turning point of the match.
— ViQi (@iamViQiii) December 8, 2021
Not with the bat but with the ball this time #PAKvBAN#BANvPAKpic.twitter.com/7n264JsmTu
அதன்பின் இன்று நடைபெற்ற போட்டியிலும் 2 ஓவர்களை வீசிய பாபர் ஆசாம் ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அசத்தி வரும் பாபர் ஆசாம், தற்போது பந்துவீச்சில் ஈடுபட்டு வருவது பலரையும் சர்ப்ரைஸ் செய்துள்ளது. மேலும் அது குறித்த இந்த காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now