
WATCH: 'Baby AB' Dewald Brevis Perfects No Look Six (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் எபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2019ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தாலும், ஐபிஎல், பிக் பேஷ் உள்ளிட்ட டி20 லீக் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார்.
இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதையடுத்து அவரை ஆர்சிபி அணி தங்கள் பயிற்சியாளர் குழுவில் சேர்க்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணியில் வளர்ந்துவரும் வீரரான டெவால்ட் ப்ரீவிஸ் அந்த அணியின் அடுத்த ஏபிடி வில்லியர்ஸாக பார்க்கப்பட்டு வருகிறார். ஏறக்குறையய எபிடியைப் போன்றே பேட்டிங் செய்யும் இவர் ‘பேபி எபிடி’ என்று அழைக்கப்படுகிறார்.