
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் - டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் டாம் அல்சப் 51 ரன்களையும், இமாத் வசீம் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இன்னிங்ஸ் முடிவில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களைச் சேர்த்தது. பர்மிங்ஹாம் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் சௌதீ 12 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிக்கு பென் டக்கெட் - கேப்டன் மொயீன் அலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் மொயீன் அலி 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த டான் மௌஸ்லியும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.