பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து பிராண்டன் கிங்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் பிராண்டன் கிங் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது பில் சால்ட் மற்றும் டேன் மௌஸ்லி ஆகியோரது அரைசதத்தின் மூலம், ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிரடியான் ஃபினிஷிங்கின் மூலமும் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்களையும், டேன் மௌஸ்லி 57 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் 19 ரன்னில் விகெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Trending
அதன்பின் ஜோடி சேர்ந்த பிராண்டன் கிங் - கேசி கார்டி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் பிராண்டன் கிங் தனது மூன்றாவது சதத்தையும், கேசி கார்டி தனது முதல் சதத்தையும் விளாசியதுடன் 2ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் கிங் 102 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 128 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
The human highlight reel Brandon King creates a moment of absolute brilliance! #TheRivalry | #WIvENG pic.twitter.com/jZUxAmO3Re
— Windies Cricket (@windiescricket) November 6, 2024
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பிராண்டான் கிங் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 74 ரன்களைச் சேர்த்திருந்த பில் சால்ட், மேத்யூ ஃபோர்ட் வீசிய 41ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரி அடிக்கு முயற்சியில் லெக் திசையில் தூக்கி அடித்தார். அதற்க்கேற்றவகையில் அவர் பந்தையும் சரியாம டைமிங் செய்து தனது ஷாட்டை விளையாடினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் பந்து நிச்சயம் சிக்ஸருக்கு சென்றது என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த பிராண்டன் கிங் பவுண்டரி எல்லையில் அபாரமான டைவை அடித்து பந்தை பிடித்த கையோடு, அதனை அல்ஸாரி ஜோசபிடம் வீசிய கையோடு பவுண்டரி எல்லையை தாண்டி விழந்தார். இதனால் பில் சால்ட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் பிராண்டன் கிங் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now