
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது ஃபின் ஆலனின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்தார். சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதானையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தனர்.
ஆனால் இதில் டூ பிளெசிஸ் 45 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிலிந்த் குமார் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அரைசதம் கடந்திருந்த டெவான் கான்வே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜோஷுவா ட்ரொம்ப் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்களையும் எடுத்து இறுதிவரை போராடினர்.