
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியும் எந்தவொரு குறைவுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 209 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் அம்பயரை திட்டியபடி மைதானத்தில் இருந்து வெளியேறிய விடயம் தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் விக்கெட்டை 24 ரன்களிலேயே விட்டுக் கொடுத்தது. அந்த வகையில் நான்காவது ஓவரின் முதல் பந்தை சந்தித்த டேவிட் வார்னர் 11 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இலங்கை வீரர் மதுஷங்கா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். உடனே மைதானத்தில் இருந்த பவுலரும் அதற்கு அப்பீல் செய்ய மைதானத்தில் இருந்த நடுவரும் அவுட் என்று அறிவித்தார்.