தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் - எம் எஸ் தோனி!
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் அவர்களின் கடைசி லீக் போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானததில் நடைபெற்று வருகிறது. டெல்லி அணி ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் சென்னை அணி இந்தப் போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் களமிறங்கியது.
இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்து, டெல்லி அணியை பந்துவீச அழைத்தார். இன்றைய போட்டிகான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் லலித் யாதவ், மற்றும் சேத்தன் சகாரியா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர்.
Trending
Toss Update @ChennaiIPL win the toss and elect to bat first against @DelhiCapitals.
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
Follow the match https://t.co/ESWjX1m8WD #TATAIPL | #DCvCSK pic.twitter.com/b13K9cKoyV
அப்போது பேசிய தோனி, “முதல் போட்டியிலிருந்தே வெல்ல வேண்டும், ப்ளே ஆஃப்ஸ்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. இந்தப் போட்டிக்கு ஒன்றும் புதிதாக இல்லை. அதே ப்ளேயிங் லெவனோடுதான் ஆடப்போகிறோம். அணி ஒரு மாதிரியாக செட் ஆகி சமநிலையோடு இருக்கிறது. இதை அப்படியே தொடர விரும்புகிறோம். இப்படியான தொடர்களின் போது வலுவான மனநிலை வேண்டும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். இதைதான் இளம் வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now