
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் இளம் படை 5ஆவது முறையாக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை, ராஜ் பவா மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மிரட்டினர். அவர்களின் அட்டகாச பவுலிங்கால் இங்கிலாந்து அணி டாப் ஆர்டர் சரிந்தது. 91 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து விழிப்பிதுங்கி நின்ற நேரத்தில் ஜேம்ஸ் ரேவ் மட்டும் 95 ரன்கள் அடிக்க 189 ரன்களுக்கெல்லாம் இங்கிலாந்து சுருண்டது. இந்திய அணி தரப்பில் ராஜ் பவா 5 விக்கெட்டையும், ரவிகுமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்தை மிரட்டினர்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் 2ஆவது பந்திலேயே விக்கெட் விழுந்தது. இதன் பின்னர் வந்த துணைக்கேப்டன் ஷாயிக் ரஷீத் 50 ரன்கள், கேப்டன் யாஷ் துல் 17 ரன்கள் அடிக்க இந்திய அணி சீரான இடைவெளியில் ரன்களை சேர்த்தது. எனினும் கடைசி நேரத்தில் முக்கிய விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததால் அனைவருக்கும் பதற்றம் எடுத்தது.