Advertisement

ஐபிஎல் 2022: கேள்விக்குறியாகும் விராட் கோலியின் ஃபார்ம்!

லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 19, 2022 • 22:37 PM
WATCH: Dushmantha Chameera's Dream First Over Gets Virat Kohli Out On A Golden Duck
WATCH: Dushmantha Chameera's Dream First Over Gets Virat Kohli Out On A Golden Duck (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 31 ஆவது போட்டி, தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், லக்னோ கேப்டன் கே எல் ராகுல் டாஸ் வென்று, பீல்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆர்சிபி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. 

Trending


ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பெங்களூர் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் மட்டும் தனியாளாக நிலைத்து நின்று ரன் சேர்த்தார். நூலிழையில் சதத்தினை தவற விட்ட டுபிளெஸ்ஸிஸ், 96 ரன்களில் அவுட்டானார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கோலியின் ஃபார்ம், ரசிகர்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றி உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள கோலி, 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இன்னும் ஒரு அரை சதம் கூட அடிக்காத கோலி, இரண்டு முறை மட்டும் 40 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து, லக்னோ அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் கோலி அவுட்டான விதம், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் விமர்சனத்தை உண்டு பண்ணியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement