
Watch: England Openers Put To 'Balance' Test Ahead Of Boxing Day Test (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரி டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஏனெனில் இங்கிலாந்து அணி அப்படி வெற்றி வேட்கையுடன் விளையாடுவதாக தெரியவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி, 2 டெஸ்ட்டிலுமே படுதோல்வி அடைந்திருக்கிறது.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது.