இணையத்தில் வைரலாகும் ஹர்லீன் தியோல் ரன் அவுட் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

EN-W vs IN-W, 1st ODI: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று சௌத்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சோஃபியா டங்க்லி 83 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சோபிக்க தவறிய நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா 62 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீராங்கனை ஹர்லீன் தியோல் தனது அலட்சியத்தால் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் இன்னிங்ஸின் 22ஆவது ஓவரில் நடந்தது. இங்கிலாந்து தரப்பில் அந்த ஓவரை சார்லீ டீன் வீசிய நிலையில், நான்காவது பந்தை எதிர்கொண்ட ஹர்லீன் தியோல் மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் நான் ஸ்டிரைக்கர் ஸ்டம்புகளை த்ரோ அடித்தார். இருப்பினும் அப்போது ஹர்லீன் தியோல் க்ரீஸில் நுழைந்ததாக தெரிந்தது.
Direct hit. GONE.
— England Cricket (@englandcricket) July 16, 2025
ADR, quick hands pic.twitter.com/hYCaSlcbCv
Also Read: LIVE Cricket Score
இருப்பினும் இங்கிலாந்து வீரர்கள் மேல்முடிவிற்காக நடுவரை அனுக, மூன்றாம் நடுவரும் அதனை சரிபார்த்தார். அப்போது பந்து ஸ்டம்புகளை தாக்கியது. அந்த சமயம் ஹர்லீன் தியோல் அலட்சியமாக இருந்ததால் பந்து ஸ்டம்புகளை தாக்கும் சமயத்தில் அவரது பேட் க்ரீஸினுல் இருந்தலும், அது தரையை தொடாத காரணத்தால் அது அவுட் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இப்போட்டியில் ஹர்லீன் தியோல் 27 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now