
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையாடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷானும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், நிதீஷ் குமார் ரெட்டி 2 ரன்னிலும், அனிகெத் வர்மா 12 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இஷான் கிஷான் விக்கெட்டை இழந்த விதம் கிரிக்கெட் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இப்போட்டியின் மூன்றாவது ஓவரை தீபக் சஹார் வீசிய நிலையில் அந்த ஓவரின் முதல் பந்தை வைடராக வீசினார். அதனை எதிர்கொண்டா இஷான் கிஷானும் லெக் சைடில் தட்டிவிட முயற்சித்த நிலையில் பந்தை தவறவிட்டார்.