Advertisement
Advertisement
Advertisement

பட்லரின் கேட்ச்சை லாவகமாக பிடித்த ரவீந்திர ஜடேஜா - காணொளி!

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 17, 2022 • 20:46 PM
WATCH: Jadeja's Sliding Catch To Dismiss England Skipper Jos Buttler In 3rd ODI
WATCH: Jadeja's Sliding Catch To Dismiss England Skipper Jos Buttler In 3rd ODI (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

Trending


இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரர்களான ஜானி பாரிஸ்டோ மற்றும் ஜோ ரூட் ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். துவக்க வீரரான ஜேசன் ராய் 41 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் 27 ரன்களும், மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாஸ் பட்லர் 60 ரன்களும், மொய்ன் அலி 34 ரன்களும் எடுத்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த லிவிங்ஸ்டோன் (27), டேவிட் வில்லே (18) மற்றும் ஓவர்டன் (32) என அந்த அணியின் சீனியர் வீரர்கள் தங்களது பங்களிப்பை ஓரளவிற்கு சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 45.5 ஓவரில் 259 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதே போல் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரின் கடினமான கேட்ச்சை கட்சிதமாக பிடித்து ரவீந்திர ஜடேஜா அசத்தினார். அக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement