ஐபிஎல் 2022: 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பும்ரா அசத்தல் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நவி மும்பையிலுள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். கடந்த சில போட்டிகளாக துவக்க வீரராக ஃபார்மில் இல்லாமல் இருந்த வெங்கடேஷ் ஐயர், கடந்த போட்டியில் நீக்கப்பட்ட நிலையில், இந்தப் போட்டியில், 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசி 24 பந்தில் 43 ரன்கன் எடுத்து தனது பார்மை நிரூபித்தார். அதேபோல், மற்றொரு துவக்க வீரரான ரஹானேவும் 3 பவுண்டரிகள் விளாசி 24 ரன்களில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Trending
இதன்பிறகு களமிறங்கிய நிதிஷ் ராணா மட்டுமே 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் உள்பட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக பேட் கம்மின்ஸ், சுனில் நரைன் உள்பட கடைசி வரிசையில் இறங்கிய 4 வீரர்களும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். பும்ராவின் பந்துவீச்சில் அந்த அணியினர் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now