
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப்பெற்றது. இந்நிலையில் தற்போது, இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டிக்கான டாஸை வென்ற வங்கேதச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி நடைபெறவுள்ள டாக்கா மைதானத்தில் ஓரளவுக்கு பவுன்ஸ் இருக்கும் என்பதால், வேகப்பந்து வீச்சாளர்களால் இங்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும், பந்துகளும் சிறப்பாக சுழலும் என்பதால், இப்போட்டியில் ரன்களை குவிப்பது எளிதான காரியமாக இருக்காது எனக் கணிக்கப்பட்டிருந்தது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது.
முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் ஷான்டோ, ஜகிர் ஹாசன் இருவரும், முதல் ஒரு மணி நேரத்தில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஜெய்தேவ் உனாத்கட், அஸ்வின் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துவீசி, நெருக்கடியை ஏற்படுத்த ஆரம்பித்தார்கள்.