
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னின்ஸில் 141 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணியை, 2ஆவது இன்னிங்ஸில் வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் ஜோ ரூட். 277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியில் முன்னணி வீரர்கள் ஏமாற்றினர். எனினும் தூண் போன்று நின்ற ஜோ ரூட் 170 பந்துகளை சந்தித்து 12 பவுண்டர்களுடன் 115 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் ரூட்டின் பேட்டிங்கை விட, அவரின் பேட் தான் அதிக கவனம் பெற்றுள்ளது. 2ஆவது இன்னிங்ஸின் போது நான் ஸ்ட்ரைக்கரில் நின்றுக்கொண்டிருந்த ஜோ ரூட் , தனது பேட்டை கையில் இருந்து அப்படியே விட்டுவிட்டார். ஆனால் பேட் கீழே விழாமல் தானாக நேராக நின்றுக்கொண்டிருந்தது. பேட்டில் எந்தவித அசைவுகளும் இல்லை.