முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி! (Image Source: Google)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் போட்டி அஹ்மதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இறங்கினர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய இங்கிலாந்து அணிக்கு வழக்கம்போல ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார்.
இதில் இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டார்க் வீசிய பந்தை அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸிடம் தஞ்சமடைந்தது. இதனால் ஜானி பேர்ஸ்டோவ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார், இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News