Advertisement

ரபாடா பேட்டை இரண்டு துண்டாக உடைத்த லஹிரு குமாரா - வைரலாகும் காணொளி!

லஹிரு குமாரா வீசிய ஒரு பந்து காகிசோ ரபாடாவின் பெட்டை இரண்டு துண்டுகளாக உடைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
ரபாடா பேட்டை இரண்டு துண்டாக உடைத்த லஹிரு குமாரா - வைரலாகும் காணொளி!
ரபாடா பேட்டை இரண்டு துண்டாக உடைத்த லஹிரு குமாரா - வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 07, 2024 • 10:45 AM

தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரைன் ஆகியோரது சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 07, 2024 • 10:45 AM

இதில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 105 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 101 ரன்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணியில் திமுத் கருணரத்னே 20 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 44 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்கா 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Trending

இதனால் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களைச் சேர்த்தது. இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் 40 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, மஹாராஜ், பீட்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் தனது அனல் பறக்கும் பந்துவீச்சினால் உலகமெங்கும் உள்ள பேட்ஸ்மேன்களை பயமுறுத்திய ககிசோ ரபாடா, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள போராடிக்கொண்டிருந்தார். அந்தவகையில் லஹிரு குமாரா வீசிய ஒரு பந்து காகிசோ ரபாடாவின் பெட்டை இரண்டு துண்டுகளாக உடைத்தது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி லஹிரு குமார, ரவுண்ட் த விக்கெட்டில் இருந்து ககிசோ ரபாடாவிடம் ஒரு ஆபத்தான ஷார்ட் பந்தை வீசினார். இதனை தடுத்து விளையாட முயற்சித்த ரபாடா பந்தை தடுக்க, அது பேட்டை இரண்டு துண்டாக உடைத்தது. இப்படியெல்லாம் நடப்பதை பார்த்து ரபாடா முதல் வர்ணனையாளர்கள் வரை அனைவரும் ஆச்சரியப்பட்டு லஹிரு குமாரவை பாராட்டினர். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement