சீண்டிய பாபர் ஆசாம்; பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்த லிட்டன் தாஸ் - வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா பந்துவீச்சில் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அனியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்திருந்தது.
Trending
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியில் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களையும், ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 16 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் இணைந்த ஷாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இதில் 50 ரன்களில் மொமினுல் ஹக் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிய ஷாத்மன் இஸ்லாம் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய முஷ்ஃபிக்கூர் ரஹ்மீ 55 ரன்களையும், லிட்டன் தாஸ் 52 ரன்களையும் சேர்க்க, வங்கதேச அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 316 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து 132 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
Babar Azam in vain Was abusing Litton Das..
— Time Traveler (@Vicky_Ydv01) August 23, 2024
Then in anger Liton Das found Naseem Shah...
And turned them into litter dogs..
He hit 18 runs in one over..#PAKvBAN#PakistanCricket pic.twitter.com/n470B5ir7p
இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதன் காரணமாக, பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் அவரது விக்கெட்டை கைப்பற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டினர். அதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாமும், லிட்டன் தாஸை கேலி செய்யும் விதமாக சில கருத்துகளை கூற இருவரும் களத்திலேயே முறைத்துக்கொண்டனர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆனால் அப்போது ஏதும் கூறாமல் சென்ற லிட்டன் தாஸ், அடுத்த ஓவரை வீச வந்த நசீம் ஷாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸரையும், பவுண்டரிகளையும் விளாசி தனது பதிலடியைக் கொடுத்திருந்தார். மேலும் அவர் அந்த ஓவரில் 18 ரன்களையும் சேர்த்து அசத்தினார். இந்நிலையில் நசீம் ஷா பந்துவீச்சில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now