
WATCH: Mastermind Spinner Yuzvendra Chahal's Impactful Hattrick Against KKR (Image Source: Google)
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யசுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 17ஆவது ஓவரில் அவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தவர் என்ற பெருமையை சாஹல் பெற்றார். இது ஐபிஎல் வரலாற்றில் 21ஆவது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும்.
இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக யுவராஜ்சிங் ஒரே ஆண்டில் 2 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்தார். 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மட்டுமே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்படவில்லை.