
Michael Bracewell Catch: முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிரடியாக விளையாடி வந்த டெவால்ட் பிரீவிஸ் 31 ரன்களைச் சேர்த்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல்லின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 47 ரன்களைச் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 51 ரன்களையும், ரீஸா ஹென்றிஸ் 37 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 31 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.