
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகார் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்களையும், மனீஷ் பாண்டே 42 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் நுவான் துஷாரா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. மும்பை அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதையடுத்து இப்போட்டியில் அரைசதம் கடந்த அணியின் வெற்றிக்கு உதவிய வெங்கடேஷ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது மும்பை அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அச்சயம் கேகேஆர் அணி தரப்பில் 19ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச, ஓவரின் முதல் பந்தி டிம் டேவிட் சிக்ஸருக்கு விளாசி மிரட்டினார். இதனால் மும்பை அணியின் வெற்றியும் கைகூடும் நிலை இருந்தது.