
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அணியின் வெற்றிலும் பங்கு வகித்தார். குறிப்பாக அவர் தனது அபாரமான யார்க்கரின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் மற்றும் டெய்ல் எண்டர் ரவி பிஷ்னோய் ஆகியோரை க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.
அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசிய நிலையில், மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் அந்த ஓவரை எதிர்கொண்டார். அப்போது அந்த ஓவரின் 5ஆவது பந்தை மிட்செல் ஸ்டார்க் அதிவேக யார்க்கராக வீசிய நிலையில், அதனை சற்றும் எதிர்பாராத நிக்கோலஸ் பூரன் பந்தை தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகினார். இதனால் அவர் 6 பவுண்டரி 7 சிக்ஸர்கல் என 75 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.