ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் எம்எஸ் தோனி. இவரது தலைமையில் சென்னை அணி 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் அண்மையில் 42ஆவது பிறந்தநாளை கொண்டாடிய எம்எஸ் தோனி, திடீரென குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார்.
தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் 'எல்.ஜி.எம்'. அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே நாயகி இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டீசர் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இசை வெளியீட்டு நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் சென்னை வந்துள்ளனர்.