
Watch: MS Dhoni had a fun conversation with T Natarajan's daughter! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி பேட்டர்கள் சிஎஸ்கேவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான ஆட்டத்தினால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதரபாத்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 77 ரன்களைச் சேர்த்தார்.