
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரகளுக்கு விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 22 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - ஜனித் லியானகே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடக்க, அவருடன் இணைந்து விளையாடிய லியானகே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த கமிந்து மெண்டிஸூம் 64 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.