4,4,4,4,4,4: ஷமார் ஜோசப் ஓவரை பிரித்து மேய்ந்த பதும் நிஷங்கா - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை வீர்ர் பதும் நிஷங்கா, ஷமார் ஜோசப்பின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நந்து முடிந்தது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 54 ரன்களைச் சேர்த்து ஆச்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ரோவ்மன் பாவெல், அல்ஸாரி ஜோசப் மற்றும் ரூதர்ஃபோர்ட் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவரில் 89 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அரைசதம் கடந்த் பதும் நிஷங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Pathum Nissanka, take a bow!
— FanCode (@FanCode) October 15, 2024
The Lankan opener showed his range as he smacked Shamar Joseph all around the park in an over that featured 6 boundaries! #SLvWIonFanCode pic.twitter.com/nxBdJqCFPF
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில், இப்போட்டியில் பதும் நிஷங்கா அடுத்தடுத்து 6 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதன்படி, வெஸ்ட் இண்டீஸும் ஷமார் ஜோசப் வீசிய இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை எதிர்கொண்ட பதும் நிஷங்கா அந்த ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி அடித்து அசத்தினார். மேற்கொண்டு அந்த ஓவரில் ஷமார் ஜோசப் ஒரு வைடயும் வீசா, மொத்தமாக அந்த ஓவரில் இலங்கை அணிக்கு 25 ரன்கள் கிடைத்தது. இந்நிலையில் பதும் நிஷங்கா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now