
அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய அணித் தேர்வுக்குழுவும் வீரர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த டி20 உலகக் கோப்பையுடன் லீக் சுற்றுடன் திரும்பியதால், இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில், ஐபிஎல் 15ஆவது சீசனுக்குப் பிறகு இந்திய அணி இரண்டாக பிரிக்கப்பட்டு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அப்படி கிடைத்த வாய்ப்பில் தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங் போன்றவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அசத்தி வருகின்றனர். இதில் தினேஷ் கார்த்திக்கின் இடம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. தீபக் ஹூடா அதிரடியாக பேட்டிங் செய்து, ரன்களை குவிக்க தடுமாறிக்கொண்டிருக்கும் கோலியின் இடத்தை பிடிக்க போராடி வருகிறார். ஹூடாவால் ஒருசில ஓவர்களையும் வீச முடியும் என்பால், ஹூடாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படும் எனக் கருதப்படுகிறது.
மறுபக்கம் சாம்சனும் ஹூடா அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவராகத்தான் இருக்கிறார். இருப்பினும், இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதாலும் அணியில் ஏற்கனவே கேஎல்ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், இஷான் கிஷன் போன்றவர்களுக்கு இடையில் கடும் போட்டி இருப்பதாலும், சாம்சனுக்கு அவ்வபோது மட்டுமே வாய்ப்பு கிடைத்து வருகிறது.