
ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஃபாப் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதன் பின்னர் வந்த க்ளென் மேக்ஸ்வெல் 9 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். அணியின் நம்பிக்கை நாயகனாக இருந்த விராட் கோலியும் 25 ரன்களுக்கு ஆவேஷ் கானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
முக்கிய விக்கெட்கள் விழுந்ததால், ஆர்சிபி அணி இனி தினேஷ் கார்த்திக்கை நம்பி தான் உள்ளது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அனைவரும் ஷாக் கொடுத்தார் ராஜத் பட்டிதார். மறுமுணையில் தூண் போன்று நின்ற பட்டிதார் லக்னோ அணி பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தார்.