
உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. இன்றைய போட்டியில் தனது முதல் ஓவரை ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் வீசிய ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் முட்டியில் காயம்
எனவே இந்தப் போட்டியில் ஷர்துல் குறைந்தபட்சம் ஒன்பது ஓவர்கள் வீசியாக வேண்டிய நிலை இருந்தது. மேலும் வங்கதேச அணி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்து அசத்தியது. நடப்பு உலக கோப்பையில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணிக்கு விக்கெட் தராத அணியாக வங்கதேசம் இருந்தது. போட்டியில் வங்கதேச அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில் முதல் விக்கெட்டை குல்தீப் யாதவ் தன்ஷித் ஹஸனை வீழ்த்தி கொண்டு வந்தார்.
இதற்குப் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் மொத்தமாக, பங்களாதேஷ் பேட்டிங் யூனிட் மீது பாய்ந்து விட்டார்கள். அடுத்து ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட், முகமது சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் ஒரு விக்கெட் என கைப்பற்ற, பங்களாதேஷ் அணியின் ரன் வேகம் சரிந்து, அவர்கள் 300 ரன்கள் என்பதை மறந்து மொத்தமாக 50 ஓவர் விளையாட வேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.