108 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக் 108 மீட்டர் சிக்ஸரை விளாசி சாதனை படைத்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது என்றுதான் கூற வேண்டும். எனேனில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதமடித்ததுடன் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களையும் குவித்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 62 ரன்களையும், விராட் கோலி 42 ரன்களையும், இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்த நிலையிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 262 ரன்களை மட்டுமே எடுத்தது.
Trending
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்தி, சன்ரைசர்ஸ் வீரர் நடராஜன் வீசிய பந்தில் இமாலய சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார்.
A m monster!
— IndianPremierLeague (@IPL) April 15, 2024
The bowlers can finally breathe at the Chinnaswamy as the batting carnage comes to an end!
Recap the match on @StarSportsIndia and @JioCinema #TATAIPL | #RCBvSRH pic.twitter.com/lclY9rs2Kf
அதன்படி, இன்னிங்ஸின 16ஆவது ஓவரை நடராஜன் வீசிய நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் ஸ்கொயர் லெக் திசையில் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசினார். தினேஷ் கார்த்திக் விளாசிய அந்த சிக்ஸரானது 108 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மிக நீளமான சிக்ஸரை விளாசிய வீரர் எனும் பெருமையையும் தினேஷ் கார்த்திக் பெற்றார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now