ரிஷப் பந்த் விளாசிய நோ- லுக் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டான் ரிஷப் பந்த் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் அதிகபட்சமாக 85 ரன்களையும், அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களையும் சேர்த்தனர்.
பின்னர் 273 ரன்கள் என்ற இலமாய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், அபிஷேக் போரல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் ரிஷன் பந்த் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Trending
அதேசமயம் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 28 ரன்களைச் சேர்த்தார். அதிலும் குறிப்பாக அந்த ஓவரின் ஒரு பந்தை நோ-லுக் ஷாட்டின் மூலம் சிக்சருக்கு விளாசி அசத்தினார். இந்நிலையில் ரிஷப் பந்த் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
NO LOOK SIX BY RISHABH PANT....!!!! pic.twitter.com/IXg736aihr
— Johns. (@CricCrazyJohns) April 3, 2024
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்தது.
ஆனால் தற்போது கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்த் அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். அதிலும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கூட ஓரளவு நிதானம் காட்டிய ரிஷப் பந்த், நேற்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி அசத்தியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now