
Glenn Maxwell Video: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 4-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை ஆடம் ஸாம்பா விசிய நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரொமாரியோ ஷெஃபெர்ட் லான் ஆன் திசையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். மேலும் அவர் அந்த ஷாட்டை விளையாடிய போது ஒரு கணம் பந்து சிக்ஸருக்கு சென்றுவிடும் என்று தோன்றியது.