
Watch Ryan Burl Catch Rishabh Pant Wicket Ind Vs Zim (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 15 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய விராட் கோலி 26 ரன்களும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 51 ரன்களும் எடுத்தனர்.