அடுத்தடுத்து அசத்தலான கேட்சுகளை பிடித்த சன்வீர் சிங்; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் சன்வீர் சிங் பிடித்த அசத்தலான் கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 71 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 49 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் திரிபாதி 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து 66 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மாவும் விக்கெட்டை இழந்தார்.
Trending
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் குமார் ரெட்டி 37 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறபபான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Still not over this catch #PlayWithFire #SRHvPBKS https://t.co/RqyWvIk9OM
— SunRisers Hyderabad (@SunRisers) May 19, 2024
இந்நிலையில் இப்போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய சன்வீர் சிங் இரண்டு அபாரமான கேட்சுகளை பிடித்து அசத்தினார். அதன்படி இப்போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் அதர்வா டைடே 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சன்வீர் சிங்கின் அசத்தலான கேட்ச் மூலம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஆதிரடி வீரர் அஷுதோஷ் சர்மாவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சன்வீர் சிங்கிடம் கேட்ச் கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் சன்வீர் சிங் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது வைரலாந்து குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now