சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கடும் கோபத்தில் ஷான் மசூத்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத்திற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பானது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. அதேசமயம் நேற்றைய தினம் ராவல்பிண்டியில் பெய்த கனமழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமாகியது.
மேலும் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக இப்போட்டியின் முதல் செஷனானது முற்றிலுமாக கைவிடப்பட்டதுடன், உணவு இடைவேளைக்கு பிறகு டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் 2 ரன்களுக்கும், கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
Trending
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த சைம் அயூப் - சௌத் ஷகீல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 56 ரன்களில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இன்று தொடங்கியுள்ள இரண்டாம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி தரப்பில் சௌத் ஷகீப் 57 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 24 ரன்களுடன் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்திலேயே களத்தில் பல்வேறு குழப்பங்கள் நடந்தன. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் விக்கெட்டை இழந்த நிகழ்வானது சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.
அதன்படி, ஷொரிஃபுல் இஸ்லாம் வீசிய பந்துவீச்சில் ஷான் மசூத் பேடில் சென்ற பந்தானது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் தஞ்சமடைந்தது. இதையடுத்து வங்கதேச அணி வீரர்கள் அவுட்டிற்காக அப்பில் செய்ய கள நடுவர் நாட் அவுட் என்ற தீர்ப்பை தெரிவித்தார். இதையடுத்து வங்கதேச அணி வீரர்கள் மூன்றாம் நடுவரிடம் மேல்முறையீடு செய்தார். மூன்றாவது நடுவரும் காணொளியை சோதித்த பிறகு ஷான் மசூத்திற்கு அவுட் என்ற தீர்ப்பையே வழங்கினார்.
Out or not out
— Pakistan Cricket (@TheRealPCB) August 21, 2024
Shan Masood is dismissed by Shoriful Islam.#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/8OgkgQKHPa
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆனால் இந்த சம்பவத்தின் காணொளியை பெரிய திரையில் பார்த்தபோது, பந்து ஷான் மசூதின் பேடில் பட்டத்து என்று தோன்றியது. இதனால் ஷான் மசூத் களநடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதன்பின் பெவிலியன் திரும்பினார். பிறகு ஓய்வரையில் சக வீரர்களுடன் ஷான் மசூத் இதுகுறித்து ஆக்ரோஷமான விவாத்தித்தார். இந்நிலையில் ஷான் மசூத் விக்கெட் இழந்த காணொளியானது இணையத்தில் வரைலாகி வருகிறது
Win Big, Make Your Cricket Tales Now