ஃபர்குசன் ஓவரை பந்தாடிய ஷஷாங் சிங் - வைரல் காணோளி!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வீரரின் அதிரடி பேட்டிங் ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றி அமைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 40வது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் முதல் முறையாக வில்லியம்சன் டாஸில் தோல்வியடைந்தார்.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைக் சேர்த்ததி. இதில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 56 ரன்களையும் சேர்த்தது.
இந்நிலையில் கடைசி ஓவரில் தான் குஜராத் அணிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதுவும் இதுவரை ஐபிஎல்-ல் பேட்டிங்கே செய்யாத ஒரு வீரரால் தான்.
கடைசி ஓவரை லாக்கி ஃபர்குசன் வீச, புதுமுக வீரர் ஷஷாங்க் சிங் களத்திற்கு வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அந்த ஓவரில் 6,0,1,6,6,6 என ரசிகர்களுக்கு சரவெடி காத்திருந்தது.
இப்போட்டியில் 6 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்த ஷஷாங் சிங் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 25 ரன்களைச் சேர்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
Win Big, Make Your Cricket Tales Now