
குஜராத்தை சேர்ந்த ஷில்டன் ஜாக்சனை, கடந்த சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் சிலர் வெளிநாட்டு வீரர் என்று கூறினர். இதனால் ஜாக்சன், கடும் மன வருத்ததில் இருந்தார். அதற்கு காரணம் சௌராஷ்டிரா அணிக்காக ரஞ்சி போட்டியில் அதிக சதம் விளாசிய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றவர் ஜாக்சன்.
ஆனால் நம்மை யாருக்கும் தெரியவில்லையே என்று சோகத்தில் இருந்த ஜாக்சன், இம்முறை தாம் யார் என்று நிரூபித்துள்ளார். கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கிட்ட ஜாக்சன், தனது விக்கெட் கீப்பிங் திறமையால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினிடமிருந்தே பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் ராபின் உத்தப்பா பவுண்டரி சிக்சர் என ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய ஆட்டத்தின் 7.5வது ஓவரில் ராபின் உத்தப்பா இறங்கி வந்து பெரிய ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவர் கணித்ததை விட இடதுபுறம் விலகி செல்ல, அதனை அபாரமாக பிடித்த ஷெல்டன் ஜாக்சன் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்தார்.