கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி அணியை கரை சேர்த்த எக்லெஸ்டோன் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி - யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்துள்ளது. இதில் யுபி வாரியர்ஸ் அணி சூப்பர் ஓவர் முடிவில் ஆர்சிபி அணியை வீழ்த்தி தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
அதன்படி, இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது எல்லிஸ் பெர்ரி மற்றும் டேனியல் வையட் ஹாட்ஜ் ஆகியோரின் அரைசதத்தின் காரண்மாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 90 ரன்களையும், டேனியல் வையட் ஹாட்ஜ் 57 ரன்களையும் சேர்த்தனர். வாரியர்ஸ் தரப்பில் சினெல்லே ஹென்றி, தீப்தி சர்மா, தஹ்லியா மெக்ராத் இணை தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Trending
அதான்பின் இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சோஃபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களைக் குவித்து போட்டியை டிரா செய்தது. இதன்மூலம் இந்த ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 9 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், அதனைத் துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சூப்பர் ஓவரில் 4 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட சோஃபி எக்லெஸ்டோன் ஆட்டநாயகி விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆர்சிபி தரப்பில் ரேணுகா சிங் வீசினார். அப்போது அந்த ஓவரை எதிர்கொண்ட சோஃபி எக்லெஸ்டோன் அந்த ஓவரின் இரண்டாவது பந்தை டீப் பேக்வேர்ட் திசையில் சிக்ஸரை விளாசிய நிலையில், அடுத்த பந்தை மிட் விக்கெட் திசையில் அபாரமான சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார்.
Did you think it was over?
— Women's Premier League (WPL) (@wplt20) February 24, 2025
Sophie Ecclestone had other ideas
We head to the first-ever #TATAWPL SUPER OVER!
Updates https://t.co/WIQXj6JCt2#RCBvUPW | @UPWarriorz | @Sophecc19 pic.twitter.com/PDz0xqWlXx
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இன்னிங்ஸின் 4ஆவது பந்தை தேர்ட்மேன் திசையில் பவுண்டரியை விளாசியதுடன், அந்த ஓவரில் மொத்தமாக 17 ரன்களைச் சேர்த்து போட்டியை டிரா செய்ய உதவினார். அதன்பின் பந்துவீசிலும் அபாரமாக செயல்பட்ட எக்லேஸ்டோன் சூப்பர் ஓவரில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இந்நிலையில் சோஃபி எக்லெஸ்டோன் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now