
Watch: Sri Lanka All-Rounder Chamika Karunaratne Celebrates Win Over Bangladesh With “Nagin Dance” (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணியில் ஆஃபிப் ஹூசைன் 39 ரன்களும், மெஹதி ஹசன் 38 ரன்களும் எடுத்தனர்.
இதனால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 183 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் குசேல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் கேப்டன் ஷனாகா 45 ரன்கள் விளாச, கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி. அப்போது இலங்கை அணி வீரர் கருணரத்னே வெற்றி கொண்டாட்டத்தின் போது நாகினி டான்ஸ் ஆடி, வங்கதேச வீரர்களை வெறுப்பேற்றினார்.