
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று சௌத்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மேட்யூ ஷார்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸும் தங்ள் பங்களிப்பை கொத்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன் எடுத்தார்.
மேலும் மேத்யூ ஷார்ட் 41 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.