4,4,6,4,4,4 - ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி விளாசிய ஸ்டப்ஸ் - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி அடித்த காணொளி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஜாக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் பொரேல் இணை தொடக்கம் கோடுத்தனர். செய்தது. இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடிய மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அவரின் அதிரடியால் டெல்லி கேப்பிட்டல்ஸ், 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அதன்பிறகும் அதிரடியாக விளையாடிய ஜாக், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் அபிஷேக் பொரேல் சில பவுண்டரிகளை அடித்தாலும் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. அவர், 36 ரன்களுக்கு நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Trending
பின்னர் ரிஷப் பந்த் உடன் இணைந்து ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி தனது பங்குக்கு 5 சிக்ஸர்களை விளாசி 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து விக்கெட்டானர். தொடர்ந்து ரிஷப் பந்துடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 257 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ரா, பியூஷ் சாவ்லா, நபி, லூக் வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Tristan Stubbs skills are superb. pic.twitter.com/V7NngE9i0k
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 27, 2024
இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரே ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசி 24 ரன்களைச் சேர்த்தார். அதன்படி இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை மும்பை அணி தரப்பில் லுக் வுட் வீசினார். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரி அடிக்க, மூன்றாவது பந்தில் சிக்ஸரையும், அதன்பின் கடைசி மூன்று பந்துகளில் பவுண்டரியும் என விளாசி 24 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடிய காணொளியானது வைரலாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now