Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: புதிய சாதனைப் படைத்த உம்ரான் மாலிக்!

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சாதனை புரிந்தார்.

Advertisement
Watch Umran Malik 154 Kmph Ball And Ruturaj Gaikwad Boundary Shot
Watch Umran Malik 154 Kmph Ball And Ruturaj Gaikwad Boundary Shot (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 02, 2022 • 01:38 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றைய போட்டியில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 02, 2022 • 01:38 PM

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சாதனை புரிந்தார். அவர் இரண்டு முறை 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். 

Trending

ஆட்டத்தின் 10வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முதலில் இந்த வேகத்தில் வீசினார். இதில் அவர் பவுண்டரி அடித்தார். பின்னர் 19ஆவது ஓவரில் தோனிக்கு போட்ட யார்க்கர் பந்து 154 கிலோ வேகத்தில் வந்தது. 

இந்த ஐபிஎல் சீசனில் அதிவேகத்தில் பந்து வீசிய பெர்குசனை அவர் முந்தினார். குஜராத் அணி வீரரான பெர்குசன் 153.9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி இருந்தார்.

 

தற்போது 24 வயதான காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் இந்த சீசனில் அதிவேகத்தில் பந்து வீசிய ‘டாப்5’ல் நான்கில் இடம் பெற்றுள்ளார். அவர் இதற்கு முன்பு 153.3 கி.மீ., 153.1 கி.மீ., 152.9 கி.மீ. வேகத்தில் வீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement