
WATCH: Vintage Dhoni In Action; Smashes 21*(8) Against DC (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
தொடக்க ஜோடி 11 ஓவரில் 110 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார். தொடர்ந்து, ருத்துராஜ் 41 ரன்களும், ஷிவம் துபே 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.