
Watch: Virat Kohli Jokes With 'Sleepy' Ishant Sharma During Flight To South Africa (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டனர்.
அப்போது, விமானத்தில் ஜாலியாக இருந்த கோலி, வீரர்களுடன் கலகலப்பாக உரையாடியுள்ளார். ஒவ்வொரு வீரரையும் கலாய்த்துக் கொண்டு செல்லும் அவர், இஷாந்த் ஷர்மாவிடம் சென்று உலகம் முழுவதும் சுற்றுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்துவிட்டார். அப்படி தானே? இஷாந்த் பாய் என நக்கலாக கேட்கிறார்.